19.9 C
Scarborough

கார் விபத்தில் நால்வர் பலி!

Must read

கனடாவின் எட்மண்டன் நகரின் தெற்கில் இடம்பெற்ற பயங்கர கார் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொனோகா பொலிஸார் அறிவித்துள்ளது.

இந்த விபத்து ஹைவே 2A மற்றும் டவுன்ஷிப் சாலை 434 பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

GMC அகாடியா வாகனத்தில் பயணம் செய்த 41 வயதான சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Volkswagen டிகுவான் வாகனத்தில் பயணித்த 26 வயது ஆணும், 14 வயது சிறுவனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதே வாகனத்தில் இருந்த 14 வயது சிறுமி, விமானம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், பலத்த காயங்களுக்கு பின்னர் உயிரிழந்தார். இந்நால்வரும் மாஸ்க்வாசிஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தியுள்ளது.

GMC அகாடியா வாகனம், மற்ற வாகனங்களை முந்திக் செல்ல முயன்றபோது எதிரே வந்த டிகுவான் வாகனுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது.

விபத்து தொடர்பான விசாரணை தொடரும் நிலையில், இது குறித்து மேலும் தகவல்கள் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article