பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சின்னத்திரை நடிகை தேவி பிரியா கார் விபத்தில் சிக்கியுள்ளது. நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது, தேவி பிரியாவின் கார் பஞ்சர் ஆகியுள்ளது. இதையடுத்து சாலையின் ஓரமாக தேவி பிரியார் கார் நிறுத்தப்பட்டது. காரின் டிரைவர், பஞ்சரான டயருக்கு பதிலாக புதிய டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று, தேவிபிரியாவின் காரின் பின்பக்கத்தில் பயங்கர வேகத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் காரின் டிரைவர் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். நடிகை தேவி பிரியா காயமின்றி உயிர் தப்பிய நிலையில், அவரது உதவியாளர் திவாகர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

