4.3 C
Scarborough

காசா அமைதிக்காக சர்வதேச நாடுகள் பல இணையும் மாநாடு நாளை!

Must read

பாலஸ்தீனத்தின் காசா பகுதி அமைதிக்கான உச்சி மாநாடு நாளை (அக்.13) எகிப்து நாட்டில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க மற்றும் எகிப்து தலைவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் மிக தீவிரமானது.

அதற்கடுத்த இந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான காசா மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் தீவிர முயற்சியினால் அண்மையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த 10-ம் திகதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன் பின்னர் காசாவில் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், போர் நிறுத்தத்தை கண்காணிக்க அமெரிக்கா உட்பட சில நாடுகள் தங்களது வீரர்கள் மற்றும் அதிகாரிகளை பணியமர்த்தி உள்ளது. இந்த சூழலில் காசா அமைதிக்கான உச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது.

சுமார் 20 நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article