மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்ச்சனத்தை பெற்று வருகிறது.
தக் லைஃப் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என கூறியது கர்நாடகாவில் மிகப்பெரிய சர்ச்சை கிளம்பி அது மிகப்பெரிய பேசும் பொருளாக வெடித்தது. இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் கர்நாடகாவில் குறிப்பிட்ட திரையரங்களில் திரைப்படம் வெளியிடப்போவதாக தகவல் வெளியானது அதற்கு படத்தை வெளியிட்டால் தீ வைக்கப்படும் என மிரட்டல் எதிரொலித்தது.
இதுக்குறித்து கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். ஆனால் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் பாதுகாப்பு வழங்க முடியாது என தள்ளுபடி செய்தது. வேண்டும் என்றால் தீயணைப்புக் கருவிகளை பொருத்திக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தல் கூறியுள்ளது.