தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே கடந்த மே மாதத்தில் இருந்து மோதல் போக்கு ஆரம்பித்துள்ளது.எல்லை பிரச்சினை தொடர்பில் கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளின் இடையேயும் பதற்றம் தொற்றியது.
எமரல்ட் முக்கோண பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளும் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளன, அங்கு அவர்களின் எல்லைகள் லாவோஸை சந்திக்கின்றன மற்றும் பல பழங்கால கோயில்களும் அங்கு உள்ளன.
இந்நிலையில், இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் எல்லை பகுதியில் இன்று மோதி கொண்டனர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் குடிமக்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுபற்றி தாய்லாந்து ராணுவம் வெளியிட்ட செய்தியில், அதிக அளவாக சி சா கெத் மாகாணத்தில் பலி எண்ணிக்கை உள்ளது. இதில், எரிவாயு நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்ததில், 6 பேர் பலியானார்கள். 3 எல்லைப்புற மாகாணங்களை சேர்ந்த 14 பேர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது.
இதேநேரம் கம்போடிய இராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, கம்போடியா ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளை வீசியது, இதில் குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், இது நீண்டகால எல்லைப் பிரச்சினையின் விளைவாக நேர்ந்துள்ளது.