கனடாவில் பதின்ம வயதினர் தொடக்கம் வயதானவர்கள் வரையில் அதிகமானோர் உடல் எடை கூடியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலான வயது வந்தவர்கள் தற்போது அதிக எடை அல்லது உடல் பருமன் கூடிய நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அண்மையில் ளெியிட்ட தகவல்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2022 முதல் 2024 வரையிலான காலத்தில், 18 முதல் 79 வயதுக்குட்பட்ட கனடியர்களில் 68 வீதமானவர்கள் அதிக எடை கொண்டவர்கள் என அறிக்கை தெரிவிக்கிறது.
இது, கோவிட் பெருந்தொற்றுநோய்க்கு முன்பாக (2016–2019) 60% வீதமாக காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம் பலருக்கும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரிப்பு பரவலாக உள்ளது என்றும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
49 வீதமான கனடியர்களின் இடுப்பு அளவு, சுகாதார ஆபத்துகளுடன் தொடர்புடைய அளவை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.