சீனாவின் சமூக ஊடகம் ஒன்று கனேடிய அதிபர் தேர்தலில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதன்படி வீ செட் செயலியிலுள்ள ID ஒன்று கனேடிய அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்புடன் செயற்படுத்தப்பட்டு வருவதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.
அதன்படி கனேடிய பிரதமர் மார்க் கார்னிக்கு ஆதரவானதும் எதிரானதுமான பதிவுகள் அந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செயலியின் ஊடாக ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற இரு விடயங்கள் சார்ந்தும் அதிகளவில் தகவல்கள் பகிரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி மார்க் கார்னியின் பெயர் பேசுபொருளாதார நீடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
கனேடிய அரசாங்கம் இதனுடன் தொடர்புபட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படவில்லை என்ற நிலைமைக்குள் சீனாவினுடைய எந்த தலையீடுகளும் இந்த தேர்தலுக்குள் வரக்கூடாது என்பதில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியாக உள்ளது.
சீனாவிம் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகின்ற நிலையில், இதனால் தேர்தலில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்ற நிலைப்பாட்டில் கனேடிய பாதுகாப்பு துறையினர் இருப்பதாக கூறப்படுகிறது.