லாட்வியாவிற்கு அனுப்பப்பட்ட எட்மண்டனை தளமாகக் கொண்ட கனேடிய ஆயுதப்படை உறுப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
ஜார்ஜ் ஹோல் எனப்படும் அவர் செவ்வாய்க்கிழமை காணாமல் போனதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையியல் தேசிய பாதுகாப்புத் துறை மற்றும் கனேடிய ஆயுதப்படைகளின் ஊடக பிரிவு அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் ஜார்ஜ் ஹோல் கனேடிய படைகளின் இராணுவ காவல்துறை விசாரணை தொடர்பில் லாட்வியன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வந்ததாக கூறியுள்ளது.
அவரது மரணம் பணியமர்த்தப்பட்ட உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான எந்த அறிகுறியும் இன்னும் தெரியவில்லை என்று அது மேலும் கூறியுள்ளது.
ஜார்ஜ் ஹோல் 408 தந்திரோபாய ஹெலிகாப்டர் படைப்பிரிவைச் சேர்ந்த வாகன தொழில்நுட்ப வல்லுநராக இருந்ததோடு லாட்வியாவில் உள்ள நேட்டோ பன்னாட்டு படைப்பிரிவுக்கு விமானப் பிரிவின் செயற்பாடொன்றிலும் பங்கேற்றுள்ளார்.
அ 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ள அவரது மரணத்திற்கான சூழ்நிலைகள் குறித்த விசாரணை நடந்து வருகிறது.