கனடா மக்களின் ஆயுட்காலம் சற்று அதிகரித்துள்ளதாக தரவுகள் காட்டுவதாகவும் 2022 இல் 81.3 ஆண்டுகளாக இருந்த ஆயுட்காலம் 2023 இல் 81.7 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த போக்கு எதிர்பார்த்தபடி தொடராமல் போகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையில் குறைவு மற்றும் வயதானவர்களில் பெரும்பாலான இறப்புகள் ஏற்பட்டமை ஆகியன ஆயுட்கால அதிகரிப்பிற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
தொற்று நோய் காலப்பகுதியை அண்மித்த 2023 இல் விபத்து, மருந்து விஷம் உட்கொள்ளல் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட இறப்புகள் 7,162 ஆக பதிவாகியிருந்தது.
அதேநேரம் புகைபிடித்தல், மது மற்றும் உடல் பருமன் தொடர்புடைய பாதிப்பு விகிதங்கள், சுகாதார பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றமை, சுற்றுச்சூழல் மாற்றங்கள் காரணமாக ஆயுட்காலம் மீதான சாத்தியமான தாக்கம் ஏற்படலாம்.
எனவே இந்த சிறிய ஆயுட்கால அதிகரிப்பு எதிர்காலத்தில் ஆயுட்கால அதிகரிப்புக்கான உத்தரவாதத்தை குறிக்காது என
சுற்றுச்சூழல் பகுப்பாய்வு நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் தலைமை மக்கள்தொகை ஆய்வாளருமான டக் நோரிஸ், குறிப்பிட்டுள்ளார்.
ஆயுட்காலம் மீண்டும் அங்குலம் அளவில் மேல்நோக்கி வருகிறது ஆனால் கடந்த காலத்தை விட மெதுவான வேகத்தில் இந்த அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
2022 உடன் ஒப்பிடும்போது 2023 இல் COVID-19 இறப்புகள் 60% குறைந்தன, இது ஆயுட்காலம் அதிகரிக்க பங்களித்தது. ஆயுட்காலத்தில் பாலின இடைவெளி காலப்போக்கில் குறைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.