13.3 C
Scarborough

கனேடியப் பொருட்களுக்கான வரியை 35 சதவீதமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்!

Must read

ஒட்டாவா வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் August 01 முதல் வரிகளை உயர்த்துவதாக அச்சுறுத்தியிருந்த நிலையில், கனேடியப் பொருட்களுக்கான வரிகளை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் Donald Trump கையெழுத்திட்டுள்ளார். எனினும் Canada-United States-Mexico  ஒப்பந்தத்தின் (CUSMA) கீழ் உள்ள பொருட்களுக்கு இந்த வரிகள் பொருந்தாது.

அமெரிக்காவிற்குள் fentanyl மற்றும் ஏனைய சட்டவிரோத போதைப் பொருட்களை தடுப்பதில் கனடா ஒத்துழைக்கத் தவறிவிட்டது. என்றும், அதற்கு பதிலளிக்கும் விதமாக கனடா மீதான வரியை அதிகரிப்பது அவசியம் என்று ஜனாதிபதி Trump கருதுவதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.

மெக்சிகோவுடன் ஒப்பிடும்போது கனடாவின் எல்லையில் மிகக் குறைந்த அளவிலான fentanyl பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன. எனினும், இதுவரை இந்த வரி உயர்வு தொடர்பான அறிவிப்புக்கு Carney யின் அலுவலகம் பதிலளிக்கவில்லை.

Ontario மாகாண முதல்வர் Doug Ford மத்தியரசு இதுகுறித்து அமெரிக்காவிற்கு வலுவாக பதிலளிக்க வேண்டும் எனவும் அதற்காக, அமெரிக்க இரும்பு மற்றும் அலுமினியம் மீது மத்திய அரசு 50 சதவீத வரியை விதிக்க வேண்டும் என்றும் அவர் ஒரு சமூக ஊடகப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவிற்கு தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயு, முக்கியமான கனிமங்கள், இரும்பு மற்றும் அலுமினியம், மின்சாரம், Potash மற்றும் Uranium போன்றவற்றை வழங்கும் அமெரிக்காவின் முதன்மையான வாடிக்கையாளராக கனடா காணப்படுவதுடன் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நாடாகவும் கனடா விளங்குகின்றது.

எனவே இந்த நேரத்தில் உறுதியான நிலையில் இருந்து கனடாவிற்கு தேவையான ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article