8.7 C
Scarborough

கனடா வாழ் யாழ்.நபரின் மோசமான செயல்!

Must read

லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்ற விமானத்தில், 55 வயதுடைய லண்டனில் பணிபுரியும் இலங்கை அலுவலக பெண் உதவியாளரின் கைப்பையை திருடிய கனடா வாழ் யாழ் நபர் கொழும்பு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொருட்களை பறி கொடுத்த பெண் , இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இரட்டைக் குடியுரிமை பெற்ற அலுவலக உதவியாளர் என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அவரது கைப்பையில் £ 2,700 (சுமார் ரூ. 1,423,500) பணமும், இரண்டு புதிய iPhone ஃபோன்கள் மற்றும் இரண்டு புதிய சாம்சங் ஃபோன்கள் இருந்துள்ளன.

இந்நிலையில் விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் அவரது கைப்பை காணாமல் போனதை உணர்ந்த அந்த பெண், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து உடனடியாக விமானத்தில் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும், கைப்பையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் BIA இல் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புலனாய்வாளர்கள், BIA பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து, பயணிகளையும் , அவர்களின் பொருட்களையும் சோதனை செய்தனர்.

இதன்போது குறித்த கைப்பை 60 வயதான இலங்கை மற்றும் கனடா இரட்டை குடியுரிமை பெற்ற குடிமகன் என்பதும் , யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கைப்பை மீட்கப்பட்ட போது, சந்தேக நபர் திருடப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை விமானத்தில் 6 போத்தல் விஸ்கி மற்றும் 3 போத்தல் வாசனை திரவியம் வாங்க , அந்த பணத்தை பயன்படுத்தியிருந்தார்.

சந்தேக நபர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசாரணையாளர்களால் , BIA போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரை கைது செய்த போலீசார் , திருடப்பட்ட பொருட்களை போலீஸ் காவலில் எடுத்துச் சென்றனர்.

விமான நிலைய (BIA)போலீசால் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின், திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article