கனடாவில் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் நோவா ஸ்கோஷியாவில் மருத்துவர் ஒருவர்பாலியல் குற்றச்ச செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் இந்த சம்பவம் இட்மபெற்றதாக கூறப்படுகின்றது.
கடந்த மே மாதம், நோவா ஸ்கோஷியாவின் அப்பர் நப்பன் பகுதியில் உள்ள கம்பர்லேண்ட் பிராந்தியத்தில் ஹெல்த் கேர் சென்டரில் ஒரு மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளி பரிசோதனையின் போது நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சா்டிடன் பேரில் சஞ்ஜீவ் சிர்பால் என்ற மருத்துவர் ஆகஸ்ட் 14 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மருத்துவர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டதுடன், நோவா ஸ்கோஷியாவின் அம்ஹெர்ஸ்ட் நீதிமன்றத்தில் நவம்பர் 15 ம் திகதி மீண்டும் முன்னிலையாக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மருத்துவரின் மூலம் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, இவர் முன்னதாக கியூபெக் மற்றும் நோவா ஸ்கோஷியாவில் பணிபுரிந்தவர் மற்றும் தற்போது நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.