இந்திய பிரதமர் மோடி நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அரசு முறை பயணமாக கனடா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.
கனடாவில் ஜூன் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கவிருக்கிறார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கியது ‘ஜி – 7’ அமைப்பு.
இந்த அமைப்பு குறித்த நாடுகளிடையேயான அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களை விவாதித்து, மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
நடப்பாண்டிற்கான ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது. ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், நரேந்திர மோடி ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்த உச்சிமாநாட்டில், எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் புதுமை உள்ளிட்ட முக்கியமான உலகளாவிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, உலக நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனையடுத்து சைப்ரஸ் மற்றும் குரேஷியா ஆகிய நாடுகளுக்கும் பயணிக்கவுள்ளார். சைப்ரஸ் நாட்டிற்கு, 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.