இன்றைக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக கனடாவில் கிருஷ்ணர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வெள்ளையின நபர்கள் என்பதுடன் இவர்கள் 24,25 மதிக்கத்தக்க இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் 500 டொலர்களுக்கும் குறைவான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இவர்கள் இருவரும் தற்போது நிபந்தனை பிணையில் விடுதலை இவர்களது வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில் மற்றுமொரு தினத்தில் குறித்த வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.