கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் Pete Hoekstra, அமெரிக்காவின் புதிய தேசியப் பாதுகாப்பு உத்தியானது தனது அரசாங்கம் கனடாவில் அரசியல் ரீதியாக இணந்த கட்சிகளை ஆதரவளிக்க வழிவகுக்கும் என்ற கவலைகளைத் தணித்துள்ளது என்கிறார்.
கனடாவின் உள்நாட்டு அரசியலில் அமெரிக்கா தலையிடுவதை தான் பார்க்கவில்லை என்று Hoekstra கூறிய அதே வேளையில், வரிகளை எதிர்த்து மறைந்த Ronald Reagan ஐ மேற்கோள் காட்டி அமெரிக்க தொலைக்காட்சி வலைப்பின்னல்களில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டதன் மூலம், Ontario மாகாணம் அத்தகைய தலையீட்டில் ஈடுபடுகிறது என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
கனடாவில் உள்ள Trump பின் பிரதிநிதியான அவர், செய்தி நிறுவனமொன்றிற்கு வழங்கிய விரிவான வருடாந்த நேர்காணலின் போது, தேசியப் பாதுகாப்பு ஆவணத்தில் உள்ள மொழியை “பரந்த அளவில்” புரிந்துகொள்ள முடியும் என்று கூறினார்.
ஆனால், இந்த புதிய உத்தி, கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதற்கான ஒரு திட்ட வரைபடமாக இருக்கலாம் என்று விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
தேசியப் பாதுகாப்பு உத்தியில், அமெரிக்க அரசாங்கம் தனது கொள்கைகள் மற்றும் உத்தியுடன் பரந்த அளவில் ஒத்துப்போகும் அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஊக்குவிப்பதுடன் வெகுமதியும் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

