10.8 C
Scarborough

கனடா அமைச்சர்களுடன் அவசர சந்திப்புக்கு ஏற்பாடு!

Must read

கனடாவின் Tumbler Ridge பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, OpenAI நிறுவன பிரதிநிதிகளுக்கும் கனடா அமைச்சர்களுக்கும் இடையே அவசர சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

துப்பாக்கிச் சூடு நடத்திய Jesse Van Rootselaar என்பவரின் கணக்கை விதிகளை மீறியதற்காக கடந்த ஜூன் மாதமே OpenAI முடக்கியிருந்தது.

ஆனால், அந்தத் தகவலை அப்போது காவல்துறையிடம் தெரிவிக்காதது மிகப்பெரிய தவறு என கனடா அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே ஒரு பயனரின் செயல்பாடுகள் குறித்து பொலிசாரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு விதிகளை (Safety Protocols) இன்னும் பலப்படுத்த வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை உடனடியாக காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர்களான Gary Anandasangaree, Evan Solomon, மற்றும் Sean Fraser ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

நிறுவனம் தானாக முன்வந்து பாதுகாப்பு மாற்றங்களைச் செய்யாவிட்டால், அரசு புதிய சட்டங்களைக் கொண்டுவரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article