கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடன் நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தனது சமூக ஊடக பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”கனடா, வியாபாரம் செய்ய மிகவும் கடினமான ஒரு நாடாக இருப்பதைத் தவிர, எங்கள் விவசாயிகளிடம் பல ஆண்டுகளாக பால் பொருட்கள் மீது 400 வீத வரி விதித்து வந்துள்ளது.
இப்போது அவர்கள் எமது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேவைகள் வரியை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது எங்கள் நாட்டின் மீது நேரடியானதும் மற்றும் வெளிப்படையானதுமான தாக்குதலாகும்.
தெளிவாக கூறினால் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை போல செயல்படுகிறார்கள் அந்த அமைப்பும் எம்மிடம் இவ்வாறே செயல்பட்டது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.