15.1 C
Scarborough

கனடாவில் Doorbell camera-வில் ஒலியுடன் பதிவான விண்கல் விழும் காட்சி

Must read

கனடாவில் சிறிய விண்கல் விழுந்த காட்சி ஒலியுடன் வீடொன்றின் Doorbell camera-வில் பதிவாகியுள்ளது.

கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் ஜூலை மாதத்தில், ஜோ வேலாய்டம் (Joe Velaidum) என்பவரின் வீட்டின் நடைபாதையில் விண்கல் ஒன்று விழுந்து, சிறிய குழி உருவானது.

இந்த சம்பவம், அவர் வீட்டின் Doorbell camera-வில் ஒலியுடன் பதிவாகியது.

இது வரலாற்றில் முதன்முறையாக ஒரு விண்கல் விழும் நிகழ்வை ஒலியுடன் பதிவான வீடியோவாகும்.

கால்பந்து அல்லது பேஸ்பால் அளவுள்ள இந்த விண்கல், வேகமாக வந்து நடைபாதையில் மோதி மண்ணை தூசியாக மாற்றியது.

அப்போது வேலாய்டம் மற்றும் அவரது துணைவி லோரா கெல்லி இருவரும் நாய்களுடன் வெளியில் சென்றிருந்தனர். திரும்பி வந்தபோது, நடைபாதை முழுவதும் கற்கள் மற்றும் தூசிகளால் நிரம்பியிருந்ததை கவனித்தனர்.

முதலில் வீடு உடைந்தது என நினைத்த வேலாய்டம், Doorbell camera-வின் வீடியோவை பார்த்த பின்னர் இது விண்கல் என உறுதி செய்தார்.

“ஒரு இரண்டு நிமிடங்கள் கூட அந்த இடத்தில் நின்றிருந்தால், நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்திருப்பேன்,” என அவர் தெரிவித்தார்.

இந்த விண்கல், செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையிலுள்ள ஆஸ்டராய்டு பகுதியிலிருந்து வந்தது என அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இது சார்லோட்ட்டவுன் (Charlottetown) என பெயரிடப்பட்டுள்ளது.

நாசா தரவின்படி, தினமும் 43 டன் விண்கல் புவியைக் கண்டு வருகின்றன. ஆனால், இத்தகைய விசாலமான பதிவுகள் மிகவும் அபூர்வம் என கூறப்படுகிறது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article