கனடாவில் 26 வயதான நபர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பு மூலம் 60 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றுள்ளார்.
டொராண்டோவில் வசிக்கும் 26 வயதான மென்பொருள் தொழில்நுட்ப பணியாளர் போசெங் மேய் என்பவரே இவ்வாறு பணப் பரிசு வென்றுள்ளார்.
பரிசு வென்றமை குறித்து லொத்தர் சீட்டு நிறுவனம் மேற்கொண்ட அழைப்பினை குறித்த இளைஞர் நம்பவில்லை எனவும் பின்னர் அந்த அழைப்பு நிறுவனத்திடமிருந்து வந்தது என்பதை உறுதி செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
என் கைகள், கால்கள் எல்லாம் வியர்த்து, வறண்டு போனது எனவும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மனம் தயாராக இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோருக்கு நல்லதொரு வாழ்வினை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.