ஏப்ரல் 01 ஆந் திகதி முதல் நுகர்வோர் காபன் வரி இரத்துச் செய்யப்படும் என்ற பிரதமர் கார்னியின் கொள்கைக்கு அமைவாக டொரண்டோ பகுதி உட்பட நாடு முழுவதும் ஒரேநாளில் எரிவாயு விலை குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்துறை ஆய்வாளர் டேன் மெக் டீகுவின் கணிப்பின்படி ஒரே நாளில் எரிவாயு விலைகள் 20 சதம் குறையும் என்று மதிப்பிட்டுள்ளார். பெட்ரோலுக்கான தற்போதைய காபன் வரி லீற்றருக்கு 17.61 சதமாகவுள்ளதாகவும், ஒன்ரோறியோவில் ஏப்ரல் 01 ஆந் திகதி தொடக்கம் நிரப்பு நிலையங்களில் லீற்றருக்கு குறைந்தது 19.9 சதமாக குறையும் என்றும் மெக் டீகூ கூறுகிறார்.
இவற்றில் gasoline மட்டுமல்லாது diesel மற்றும் விமான எரிபொருள், இயற்கை எரிவாயு போன்றவையும் உள்ளடங்குகிறது. காபன் வரியை தொடர்ச்சியாக எதிர்த்து வரும் ஒன்ரோறியோ முதல்வர் டக் போர்ட் இது தொடர்பில் கருத்து வெளியிட்டபோது இதுவரை இல்லாத மோசமான வரி என காபன் வரியைப் பற்றிக் கூறினார்.