கனடாவில் சுமார் 10 வீதமானவர்கள் வரி கோப்புகளை பதிவு செய்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சிலர் பல ஆண்டுகளாகவே வரி கோப்புகளை உரிய முறையில் பதிவு செய்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அரசாங்கத்திற்கு அவர்கள் பெருந்தொகை பணத்தை செலுத்த வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வரிகோப்புகளை முறையாக பதிவு செய்ய தவறுவோம் அரசாங்கத்தின் நலன்புரி திட்டங்களை பெற்றுக் கொள்ளவும் தகுதி அற்றவராகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே உரிய நேரத்தில் வரிகோப்புகளை பதிவு செய்வது மிகவும் அத்தியாவசியமானது என தெரிவிக்கப்படுகிறது.