கனடாவில் 10 நாட்களில் ஐந்து வங்கிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறன்ரோவை அண்டிய ஐந்து வங்கிகளில் இந்த நபர் இவ்வாறு கொள்ளையிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 20ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வங்கிக்குள் பிரவேசித்து கத்தி முனையில் பணம் கொள்ளையிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயதான ஜெப்ரி லாவிலோட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.