17.6 C
Scarborough

கனடாவில் வலி நிவாரண மருந்தால் 50,000 பேர் மரணம்., அதிர்ச்சியூட்டும் அரசாங்க அறிக்கை

Must read

கனடாவில் fentanyl வலி நிவாரண மருந்தை உட்கொண்டதால் இதுவரை 50,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

Fentanyl வலி நிவாரணியாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கனடாவில் fentanyl மாத்திரை காரணமாக மரணமடைந்தோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று புதிய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

2016 ஜனவரியிலிருந்து 2024 ஜூன் மாதம் வரை, கிட்டத்தட்ட 50,000 பேர் Opiod மயக்க மருந்துகள் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இவற்றில், 49,105 மரணங்கள் fentanyl உட்கொண்டதன் விளைவாக ஏற்பட்டுள்ளதாக தேசிய சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

2024-இல் இதுவரை பதிவான ஓபியாட் மரணங்களில் 79 சதவீதம் fentanyl காரணமாக அமைந்துள்ளது. இது 2016-இல் இருந்ததை விட 39 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், ஓபியாட் பிரச்சினை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கிய கவலையாக உள்ளது.

கனடாவில் fentanyl உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், அது உள்ளூர் தேவையை மிஞ்சியதால் fentanyl ஏற்றுமதி நாடாக கனடா மாறியதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கனடாவில் தயாரிக்கப்பட்ட fentanyl பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் இந்த தகவல் உறுதியாகியுள்ளது.

2024-இல் தினசரி சராசரியாக 21 பேர் Opiod மயக்க மருந்துகள் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

ஆனால், 2023-உடன் ஒப்பிடும்போது இது 11% குறைவு என Health Canada தெரிவித்துள்ளது.

இருப்பினும், தரவுகள் மாறக்கூடியது எனவும், மயக்க மருந்து தொடர்பான பாதிப்புகள் தொடர்ந்து மிகவும் உச்ச நிலையில் உள்ளன என்றும் Health Canada எச்சரித்துள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article