கனடாவில் மீண்டும் டைனோஸர் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஸ் கொலம்பியாவில் செய்யப்பட்ட ஆய்விலேயே இந்த தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தடம் மூன்று விரல்களை கொண்ட டைனோஸர் ஒன்றின் தடமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த டைனோஸர் தடம் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், அந்த டைனோஸர்களுக்கு மரக் குற்றி வடிவிலான வால்களும், உடலில் கவசங்கள் போன்ற அமைப்புக்களும் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு கண்டறியப்பட்ட கால்த் தடங்கள் 30 சென்றி மீற்றர் நீளமுடையவையாக இருக்கலாம் என்றும், அவை 5 – 6 அடி நீளமாக இருந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறான தடம் காணப்டப்ட டம்லரிஷ் கடற்கரை பகுதி முற்காலத்தில் வௌ்ளப்பெருக்கு பகுதியாக காணப்பட்டதெனவும், அக்காலம் ரொக்கிஸ் மலைத்தொடரல் உருவாக ஆரம்பித்த காலம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலகளவில் செய்யப்படும் டைனோஸர் தொடர்பான ஆய்வில் இது ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.