கனடா தனது குடிவரவு விதிகளை இறுக்கமாக்கவும், 2026-ஆம் ஆண்டில் புதிய குடியிருப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளது.
பல ஆண்டுகளாக குடிவரவு அளவை அதிகரித்து வந்த கனடாவின் கொள்கையில், இந்தத் தொடர்ச்சியான குறைப்பு நடவடிக்கைகள் ஒரு முக்கிய மாற்றமாகும். கனடாவின் வேலையின்மை விகிதத்தைக் குறைக்கவும், வீட்டுவசதி மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும் மற்றும் சுகாதாரம் போன்ற பொதுச் சேவைகளின் மீதான அழுத்தத்தைத் தணிக்கும் நோக்குடனும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2026-ஆம் ஆண்டில் கனடா புதிய நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து குறைக்கும் அதே வேளையில், புதிய முன்னுரிமைகளின் அடிப்படையில் திறன்மிக்க தொழிலாளர்கள், பிரஞ்சு மொழி பேசுபவர்கள் மற்றும் கனடாவில் ஏற்கனவே பணி அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், கனடாவின் குடிவரவுக் கொள்கையானது சிறிய அளவிலான ஆனால் மிகவும் நுணுக்கமாகத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு முறையை நோக்கி நகர்கிறது. இது தகுதியான விண்ணப்பதாரர்கள், உண்மையான தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் நாடு தழுவிய சமூகங்களின் நீண்டகால நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
நிரந்தர குடியிருப்பாளர்கள் பொறுத்தவரை கனடாவில் நீண்ட காலம் தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் அனுமதி பெற்ற, ஆனால் அந்நாட்டின் குடியுரிமை பெறாது வரிகளைச் செலுத்தி சுகாதாரம் போன்ற பொதுச் சேவைகளைப் பெறத் தகுதியுடையவர்களாக இருப்பினும், கனேடிய குடிமக்களைப் போல அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. இவர்கள், குடும்ப ஆதரவு (Family sponsorship) அகதி அந்தஸ்து மற்றும் திறன்மிக்க தொழிலாளராக விண்ணப்பித்தல் ஆகிய வழிகளின் மூலம் நிரந்தரக் குடியுரிமையைப் பெற முடியும்.
அதேவேளை, பாதுகாப்பற்ற சூழலில் இருப்பவர்களுக்கு மட்டுமே அகதி அந்தஸ்த்து அல்லது மனிதாபிமான பிரிவுகளின் மூலம் முன்னுரிமை
வழங்கப்படும்.

