கனடாவின் பீட்டர்பரோ அருகே நீர்நிலையில் மாயமான இரு ஆண்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டோனி ஏரியில் உள்ள பர்லி நீர்வீழ்ச்சி அருகே இருவர் இருந்தபோது, அவர்களில் ஒருவர் கரையில் இருந்து நீரில் விழுந்து தத்தளிப்பதாகத் தோன்றியதாகவும் மற்றயவர் உதவுவதற்காக நீரில் இறங்கியதில், இருவரும் மாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தீயணைப்பு சேவைகளுடன் இணைந்து பொலிஸார் அந்தப் பகுதிக்கு அழைக்கப்பட்டு, நீர்நிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளனர்.
திங்கட்கிழமை தேடுதல் தொடர்ந்தது, ஆனால் தேடுதல் குழுவினர் மாயமான இருவரையும் கண்டுபிடிப்பதில் வெற்றி பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீருக்கடியில் தேடுதல் மற்றும் மீட்பு பிரிவு, மாயமான இருவரின் உடல்களை மீட்க உதவியது. பாதிக்கப்பட்டவர்கள், கலிடோனைச் சேர்ந்த 24 வயது ஆண் மற்றும் பிராம்ப்டனைச் சேர்ந்த 26 வயது ஆண் என்று மட்டுமே பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.