பிரதமர் மார்க் கார்னி 44 ஆவது நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தியோகபூர்வமாக ஆளுநரை சந்தித்த பின்னர் அநேகமாக ஏப்ரல் 28 கனேடியர்கள் வாக்களிக்க வேண்டிய நாளாக இருக்கும் இதன் மூலம் கனடாவில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த சிறுபான்மை அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரத்தில் லிபரல் கட்சியினர் 153 ஆசனங்களையே கொண்டிருந்தனர். மார்ச் 09 ஆந் திகதியன்று ட்ரூடோ இற்கு பின்னர் லிபரல் தலைவராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டு மார்ச் 14 அன்று தனது புதிய அமைச்சரவையுடன் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளாக லிபரல் கட்சியின் சார்பில் சந்ரா ஆர்யா போட்டியிட்டு வெற்றி பெற்ற அதே தொகுதியிலிருந்து இம்முறை மார்க் கார்னி போட்டியிடவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கார்லெடன் இல் மறுதேர்தலை எதிர்பார்க்கும் தனது முக்கிய போட்டியாளரான கொன்சவேடிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே அருகில் காரனி இம்முறை போட்டியிடுவார். அமெரிக்க பொருளாதார அச்சுறுத்தல்களுக்கு வலுவான பதிலை வழங்குதல், கொன்சவேடிவ் கட்சியை எதிர்கொள்ளல், கனடாவை ஒன்றிணைத்தல் போன்றவற்றுக்கு தேவையான ஆணையை மக்களிடமிருந்து பெற்றக்கொள்வதற்காகவே தேர்தலை நடத்தவுள்ளதாக கார்னி கூறுகிறார்.
மறுமுனையில், நான்காவது முறையாக பதவியேற்க ஆசைப்படும் லிபரல் கட்சியினர் Justin ட்ரூடோவின் தலைமை பதவிக்கு அவரது பொருளாதார ஆலோசகரான கார்னியை வைத்து மாற்றீடு செய்துள்ளதாகவும், தனது ஆட்சியில் வலுவான இராணுவத்தைக் கொண்டிருக்கும் அதே வேளையில் வாழ்க்கைச் செலவையும் குறைப்பேன் என்கிறு கூறுகின்றார் பொய்லிவ்ரே.