கனடாவில் தெற்காசிய சமூகத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் கப்பம் கோரல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காணப்படும் தெற்காசிய பிராந்திய மக்களின் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் கப்பம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த கப்பம் கோரல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கனடா வீட்டு உபயோகப் பொருட்கள்
கப்பம் செலுத்தாவிட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.