6.6 C
Scarborough

கனடாவில் தாதியர் தொழிற்துறையில் கடுமையான தட்டுப்பாட்டு!

Must read

கனடாவில் தாதியர் தொழிற்துறையில் கடுமையான தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளதாகவும் தொழிற்துறைக்கான வெற்றிடங்கள் மூன்று மடங்காக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் தாதியர் தொழிற்துறையில் பெரிய அளவில் வேலையை கைவிடும் நிலை உருவாகியுள்ளது.

மொண்ட்ரியால் பொருளாதார நிறுவனம் (Montreal Economic Institute – MEI) வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, தாதியர் வேலைவாய்ப்புகள் 2018 இல் 13,178 இலிருந்து 2023 இல் 41,716 ஆக மும்மடங்காக உயர்ந்துள்ளன.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது, 35 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு 100 புதிய தாதியர்களும் பதிவு செய்யும் போது, அவர்களில் 40 தாதியர் தொழிலைவிட்டு விலகுகின்றனர்.

இளம் செவிலியர்கள் ஏன் தொழிலைவிட்டு செல்கிறார்கள் என்பதை நான் நன்கு புரிந்துகொள்கிறேன். இது மிகுந்த மனஅழுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்துகிறது. நாங்கள் பணியமர்த்தல் குறித்து பேசுகிறோம், ஆனால் தொழிலில் நீடித்து இருப்பதைப் பற்றி (retention) கவனம் செலுத்துவதில்லை என சாஸ்காட்சுவான் மாநில தாதியர் ஒன்றியத் தலைவர் மற்றும் பதிவு செய்யப்பட்ட செவிலியர் ப்ரைஸ் போயிண்டன் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article