கனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று கடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கனடாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான வென்கூவர் விமான நிலையம் தனது செயற்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியது.
வென்கூவர் ஐலண்ட் பகுதியில் கடத்தப்பட்ட விமானம் வென்கூவர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகே பறப்பதாக கனேடிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து வென்கூவர் அனைத்துலக விமான நிலையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் 9 உள்நாட்டு விமானங்கள் வழி மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளன.