கனடாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பொலிஸார் நடத்திய சோதனையில், கனடாவில் குடியேறிய இந்திய வம்சாவளி 7 பேர் உட்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 47.9 மில்லியன் டாலர் மதிப்புள்ள 479 கிலோ கோகோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், இந்த கும்பல் அமெரிக்காவிலிருந்து, கனடாவிற்கு லாரிகளில் போதைப்பொருள் கடத்துவது அம்பலம் ஆனது. துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இந்த கும்பல் மீது கனடா பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.