கனடாவில் சுமார் 19 சட்டவிரோத குடியேறிகளை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கியுபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி பகுதியில் ஹவெலாக்க் அருகே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹெய்ட்டியைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரும் எல்லைப் பாதுகாப்புத் துறையினரும் இணைந:து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இதில் 6 பேர் குளிரினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு சிறிய குழந்தைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், அவர்களின் உயிருக்கு அபாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் ஏதிலி கோரிக்கை முன்வைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயற்சிப்பது மிக ஆபத்தானது.

