கனடாவில் குடியேறிருக்கும் இந்தியர்கள்,இலங்கையர்கள் மற்றும் ஏனைய மக்கள் கவனமாக இருக்க வேண்டிய செய்தியொன்று வெளியாகியுள்ளது.
இவ்வாறு குடியேறியவர்களின் பெயர்களில் இருக்கின்ற நிறுவனங்களின் பெயர்களில் போலியான பணிப்பாளர் சபைகளை உருவாக்கி நிறுவனத்தின் பெயரில் பெருமளவு கடன்களை பெற்று அவற்றை உண்மையான உரிமையாளர்களின் தலையில் கட்டிவிட்டு தப்பிச் செல்லும் குழுக்கள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்தக் கும்பல் மிசுசுவாவின் புறநகர் பகுதியில் இயங்கி வருவதாக தெரியவந்திருப்பதோடு, இவ்வாறு ஜெனரல் சர்மா என்ற நபரின் பெயரில் அவரது நிலத்தை மோசடி செய்திருப்பதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
எவ்வாறாயினும் ஆங்கில புலமை குறைவாக இருப்பவர்களையே இவர்கள் இலக்கு வைத்து செயற்படுகின்றனர் என்றும், அதேபோல் சிறிய அளவிலான இணையத்தல அணுகுமுறை கொண்டவர்களும் இவர்களின் பிடிக்குள் சிக்கிக்கொள்வதாக தெரியவந்துள்ளது.