கனடாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர் ஏற்படுத்திய விபத்தில் இந்திய இளைஞர் ஒருவர் பலியானார்.
கனடாவின் ஒன்ராறியோவில், கடந்த வாரம், அதாவது, அக்டோபர் மாதம் 6ஆம் திகதி, தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஹர்நூர் சிங் (27) மீது ட்ரக் ஒன்று மோதியது.
அந்த ட்ரக்கின் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்த நிலையில், சிங் அந்த துயர விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
சிங்கின் உடலை இந்தியா கொண்டுவருவதில் பல சிக்கல்கள் இருப்பதை அறிந்த அவரது குடும்பத்தினர் பஞ்சாப் கேபினட் அமைச்சரான சஞ்சீவ் அரோரா என்பவரை அணுக, அவர் வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி அவரச உதவி கோரியுள்ளார்.
அதைத் தொடர்ந்து விரைவாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட சிங்கின் உடல், நேற்று லூதியானாவில் சீக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளது.

