7.3 C
Scarborough

கனடாவில் கட்டுமானத்துறையில் ஈடுபடும் புலம்பெயர்ந்தோருக்கு போதிய பயிற்சி வழங்கப்படுவதில்லை.

Must read

2023-ஆம் ஆண்டு Montreal இல் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் சுவர் இடிந்து விழுந்து தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். அவருக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) வழங்கப்படவில்லை என்றும், கட்டுமானப் பணியில் ஈடுபடத் தேவையான பயிற்சி, அனுபவம் அல்லது தகுதிகள் அவரிடம் இல்லை என்றும் Workplace Safety Board report கண்டறிந்துள்ளது.

​மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றில் தாங்கு சுவர் (Load-bearing wall) இடிக்கப்பட்டபோது, தரைத்தளத்தின் ஒரு பகுதி அவர் மீதும் மற்ற இரண்டு தொழிலாளர்கள் மீதும் சரிந்து விழுந்ததில், அந்தத் தொழிலாளி நசுங்கி உயிரிழந்தார். Montreal வடக்குப் பகுதியில் உள்ள Rolland Boulevard மற்றும் Pascal Street சந்திப்பில் அமைந்துள்ள அந்தக் கட்டிடம், 2023 September 23 அன்று விபத்து நடந்த நேரத்தில் புதுப்பிக்கப்பட்டு வந்தது. ​புலம்பெயர்ந்தவர்களான மற்ற இரண்டு தொழிலாளர்களும் தங்கள் உடலின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் காயமடைந்தனர், ஆனால் அவர்கள் உயிர் தப்பினர்.

அறிக்கையின்படி, அந்தக் கட்டிடம் May 2022-ல் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. இதன் உரிமையாளரான Chola Empire இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தத்தை STS Construction & Renovation நிறுவனத்திற்கு வழங்கியது.

இருப்பினும், September 23, 2023 அன்று அவர்கள் தங்களின் முதல் நாள் வேலைக்குச் சென்றபோது, அவர்கள் யாருக்குமே கட்டுமானத் துறையில் குறிப்பிட்ட திறன்களோ அல்லது பயிற்சியோ இல்லை என்று பணியிடப் பாதுகாப்பு சபையான CNESST தெரிவித்துள்ளது. கட்டுமானத் தளத்தில் வேலை செய்வதற்குத் தேவையான தகுதிகள் அந்தத் தொழிலாளர்கள் யாருக்குமே இல்லை என்றும் CNESST மேலும் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க, தனது அறிக்கையின் விபங்களை பல்வேறு ஒப்பந்தகாரர்கள் மற்றும் அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்போவதாக CNESST தெரிவித்துள்ளது.

canadatamilnews

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article