கனடாவின் ஸ்காப்ரோ பிரதேசத்தில் வசித்து வந்த 55 வயது பெண் ஒருவர், உயிரிழந்து மூன்று நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
தனிமையில் வாழ்ந்து வந்த தனது சகோதரியை லண்டனில் இருந்து அழைத்த சகோதரன், தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியாத நிலையில், பொலிசாருக்கு அழைத்து தகவல் கொடுத்துள்ளார்.
பொலிசார் வீட்டிற்குச் சென்ற போது குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரண விசாரணைகளில் இது இயற்கை மரணம் என வெளிவந்த போதிலும் மூன்று தினங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாயகத்தின் உரும்பிராயைச் சேர்ந்த உரும்பிராய் பெண்ணின் தந்தையும் இலங்கையில் பிரபல மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் பனிப்பொழிவின் போது விழுந்து முள்ளந்தண்டு உபாதை ஏற்பட்டு நீண்ட காலம் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவரது கணவரை இந்தப் பெண் பராமரித்து வந்துள்ளார். கணவர் உயிரிழந்த நிலையில் குறித்த பெண் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் கனடாவில் தனிமையில் வசித்து வருபவர்கள் குறித்து நண்பர்களும், உறவினர்களும் அக்கறைகொள்ள வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்துகிறது.