கனடாவில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமில்டன் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த தீ விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பியர் அப்பார்ட்மெண்ட்ஸ் என்ற கட்டிடத்தில் இந்த விபத்து இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்தை கட்டுப்படுத்துவதற்கு சுமார் 60 தீயணைப்பு படையினர் பங்கேற்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் நான்கு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.