18.4 C
Scarborough

கனடாவில் அதிகரிக்கும் விமான விபத்துக்கள் மற்றும் கடத்தல்கள்!

Must read

ஒன்டாரியோ ஏரியில் ஒரு கடல் விமான விபத்து மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா விமான நிலையத்தில் ஒரு விமானம் கடத்தப்பட்டது போன்றவை விமானப் பாதுகாப்பு மற்றும் விமான நிலையப் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன. ஆனாலும் தரவு சராசரியாக விமான விபத்துக்கள் குறைந்து வருவதாகக் காட்டுகிறது. ஆயினும் சிறிய மற்றும் நடுத்தர விமான நிலையங்களில் பாதுகாப்பை அவை இருக்க வேண்டிய அளவிற்கு உயர்த்துவதில் பல சவால்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான Transportation Safety Board of Canada (TSB) இன் தரவுகள், ஒவ்வொரு ஆண்டும் 200 க்கும் குறைவான விமான விபத்துக்கள் நடந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன. 2024 இல் 193, 2023 இல் 181, 2022 இல் 167, 2021 இல் 192 மற்றும் 2020 இல் 171. அதாவது, அந்தக் காலகட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 181 விமான விபத்துக்கள். ஆனால் முன்னைய தசாப்தத்தில், 2010 முதல் 2019 வரை ஆண்டுக்கு சராசரியாக 251 விமான விபத்துக்கள் நடந்தன. இது அண்மையில் கனடா கண்ட விபத்துக்களை விட கணிசமாக அதிகரிப்பாகும்.

விமானிகளின் தரத்தில் எங்களுக்கு அதிகரிப்பு உள்ளது, விமானிகள் மிகவும் கடுமையான பயிற்சி பெற்று ஆய்வு செய்யப்படுகிறார்கள், மேலும் இது TSB மற்றும் பயிற்றுனர்களால் மேற்கொள்ளப்படுகிறது என McGill பல்கலைக்கழகத்தின் aviation management school ஐ சேர்ந்த ஜான் கிரேடெக் கூறினார்.

இந்த வாரம் ஒரு கடல் விமான விபத்துக்கான காரணத்தை புலனாய்வாளர்கள் இன்னும் கண்டறிய முயற்சித்து வருகின்றனர். Ontario வின் Lake Scugog பகுதியில், ஒரு சிறிய விமானம் அவர் நின்று கொண்டிருந்த கப்பல்துறையில் மோதியதில் 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தான். அதே நேரத்தில் விமானி சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இவ்வாறான விபத்துகளைக் கட்டுப்படுத்த கடந்த சில ஆண்டுகளில் Transport Canada நிறுவனம் சிறிய விமானங்கள் குறித்த TSB பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு, தங்கள் ஆய்வாளர்களை மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article