கனடாவின் ரெஜினாவின் தமிழ் சமூகம், கேன்டி கேன் பூங்காவில் நடைபெறும் வெளிப்புற நிகழ்வுகள் மூலம் இளைய தலைமுறையினருக்கு தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை கற்பிக்க முயற்சிக்கிறது.
“எங்கள் எல்லா மாணவர்களும், குழந்தைகளும் நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதன் மதிப்பை அறிந்திருக்க வேண்டும். இது அவர்களின் அடையாளம். இந்த தாக்கத்தை இளைய தலைமுறையினருக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம்,” என்று அறிவகம் தமிழ் கலாசார அகாடமியின் ஷனுகா யோகேந்திரநாதன் தெரிவித்தார்.
இளைஞர்கள் தமிழ் மொழியையும், இலங்கையின் வரலாற்றையும் கற்றுக்கொண்டனர்.
வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய நடவடிக்கைகள் மூலம் சமூகத்தில் உள்ள குடும்பங்களுக்கு பாரம்பரியங்களை பகிர்ந்து கொள்வது, இளைஞர்களை அவர்களின் கலாசார வேர்களுடன் இணைக்க உதவுகிறது என்று யோகேந்திரநாதன் விளக்கினார்.
“அவர்கள் தங்கள் கலாசாரம், வரலாறு மற்றும் மொழியை கற்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.
ரெஜினாவில் இலங்கையின் வரலாறு மற்றும் தமிழ் கலாசாரத்தைப் பற்றி அறிய இளைஞர்கள் ஒரு நிகழ்வில் பங்கேற்றனர்.
“நாங்கள் பல்வேறு சொல்வதெழுதல் போட்டிகள், பேச்சு போட்டிகள் மற்றும் கலைப் போட்டிகளையும் நடத்துகிறோம். ஆண்டு முழுவதும் அவர்கள் பங்கேற்கக்கூடிய தேர்வுகளும் உள்ளன.
இந்த முக்கியமான காரணிகளை எங்கள் குழந்தைகளுக்கு கொண்டு வருகிறோம், இதனால் அவர்கள் பெருமையுடன் தங்களை தமிழர்களாக பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.” நூறு பேர் வரையிலானவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வை ஆண்டுதோறும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தமிழ் சமூகத்திற்கு ஒரு புதிய பாரம்பரியத்தை உருவாக்குவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்