கனடாவின் முதல் இந்திய வம்சாவளி பொலிஸ் துறை தலைவர், 35 ஆண்டுகள் சேவை செய்தபின், சமீபத்தில் பணி ஓய்வு பெற்றுள்ளார்.
168 ஆண்டுகளில் முதன்முறையாக கனடாவில் பொலிஸ் துறை தலைவராக பணியாற்றிய இந்திய வம்சாவளியினர் என்னும் பெருமைக்குரியவர் டெல் மனக்.
வான்கூவர் மற்றும் விக்டோரியா பொலிஸ் துறைகளில் பணியாற்றியவரான மனக், ஆகத்து மாதம் 27ஆம் திகதி பணி ஒவு பெற்றுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநில பின்னணி கொண்டவரான மனக், 1990ஆம் ஆண்டு கனடா பொலிஸ் துறையில் இணைந்தார்.
தனது பணிக்காலத்தில் சவாலான பல விடயங்களை எதிர்கொண்ட நிலையிலும், மக்களுடன் அவர் எவ்வித நல்லுறவை வைத்திருந்தார் என்பதை வெளியாகியுள்ள வீடியோக்களில் காணமுடிகிறது.