15 C
Scarborough

கனடாவின் பாதுகாப்பு செலவினங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் அமெரிக்க தூதுவர்!

Must read

நேட்டோவின் பாதுகாப்பு அமைச்சர்கள் புதிய செலவு இலக்குகளை அங்கீகரித்துள்ள நிலையில், ஒட்டாவாவின் பாதுகாப்பு வரவு செலவுத்திட்டத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கூறும் கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர், ஆனால் கனேடிய அரசாங்கம் எவ்வாறு செலவு செய்ய வேண்டுமென்பதை அமெரிக்கா நிர்ப்பந்திக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளாகும் போது ஒருவரையொருவர் பாதுகாப்பதே நேட்டோ இராணுவ கூட்டணியின் நோக்கம் என்றும் Hoekstra கூறினார். எனினும் மார்ச் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பில் தங்கள் நியாயமான பங்கை செலுத்தாத நாடுகளுக்கு வொசிங்டன் உதவப்போவதில்லை என்றும், கண்டத்தின் அமெரிக்க பாதுகாப்பில் கனடா சுதந்திரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறியது குறித்து அவர் நேரடியாகக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

நேட்டோ நிறுவப்பட்டதிலிருந்து அதன் அங்கத்துவ நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீத செலவின இலக்கை கனடா இன்னும் பூர்த்தி செய்யாத நிலையில், கடந்த வாரம் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் Brussels இல் கூடி, பாதுகாப்பிற்கான உறுப்பினர் செலவின இலக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதமாக உயர்த்துவது குறித்து விவாதித்தனர்.

கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​2032 இல் இருந்து 2030 அல்லது அதற்கு முன்னதாக 2 சதவீத வரம்பை அடையவுள்ளதாக கார்னி கூறியிருந்தார். ஆனால் அதை எவ்வாறு அடைவது என்பது குறித்த திட்டத்தை இன்னும் வெளியிடவில்லை. இதனிடையே ஜூன் 24 ஆந்திகதி நெதர்லாந்தில் தொடங்கவிருக்கும் வருடாந்த உச்சிமாநாட்டில் பிரதமர் நேட்டோ நாடுகளின் ஏனைய அரசாங்கத் தலைவர்களுடன் கலந்துகொள்ளவுள்ள நிலையில், பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை டொரண்டோவில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் David McGuinty, கனடா தனது பாதுகாப்பு செலவினங்களை மேலிருந்து கீழாக மதிப்பாய்வு செய்து வருவதாகவும், விரைவில் அதன் திட்டங்களைப் பற்றி மேலும் வெளிப்படுத்தவுள்ளதாகவும் கூறினார், இருப்பினும் அரசாங்கம் இலையுதிர் காலம் வரை வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்யத் திட்டமிடவில்லை என தெரியவருகின்றது.

மில்லியன் கணக்கான மக்கள் ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்க எல்லையைக் கடப்பது, அரசாங்க வருமானம் மற்றும் பெரிய வர்த்தக பற்றாக்குறையை விட அதிகமாகச் செலவிடுவது போன்ற காரணங்களால் Trump வடிவமைத்த அமெரிக்காவை ஒரு நீடித்து நிலைக்கும் சாத்தியமற்ற பாதைக்கு இட்டுச் செல்வதை தவிர்க்க அவர் விரும்புவதாக Hoekstra கூறுகின்றார்.

ஜனாதிபதி Trump உடன் நெருக்கமான தொடர்புகளை பேணி வரும் Hoekstra ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு முரணான கருத்துக்களை தெரிவிக்க மாட்டார் எனவும் டரம்பிற்கு நெருக்கமான ஒருவராகவே Hoekstra செயற்படுவதாகவும் கனடாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் Colin Robertson தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article