7.6 C
Scarborough

கனடாவின் பல பகுதிகளில் கடும் குளிர் எச்சரிக்கை!

Must read

கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஹமில்டன் (GTHA) பகுதிகளில் கடும் குளிர் நிலவக்கூடும் என சுற்றாடல் அமைச்சு (Environment Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்கட்கிழமை காலை வரை நிலவும் இந்தக் கடும் குளிரினால், காற்றின் குளிர்ச்சியானது (Wind Chill) மைனஸ் 25 முதல் மைனஸ் 30 பாகை செல்சியஸ் (-30°C) வரை உணரப்படலாம்.

அதன்படி, Hamilton, Mississauga, Brampton, Milton, Vaughan மற்றும் Markham உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மஞ்சள் நிறக் குளிர் எச்சரிக்கை (Yellow Warning – Cold) விடுக்கப்பட்டுள்ளது.

திறந்த வெளியில் இருக்கும் தோல் பகுதிகள் சில நிமிடங்களிலேயே உறைபனித் தாக்கத்திற்கு (Frostbite) உள்ளாகலாம் என்பதால், போதுமான ஆடைகளை அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரொறன்ரோ நகரில் கடும் குளிர் காரணமாக மேலதிகமாக இரண்டு தற்காலிக கதகதப்பு மையங்கள் (Warming Centres) திறக்கப்பட்டுள்ளன.

மக்கள் மட்டுமன்றி, வளர்ப்புப் பிராணிகளையும் நீண்ட நேரம் வெளியில் விட வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article