கனடாவின் நியூ பிரவுன்ஸ்விக் பகுதியில் சுமார் 6700 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைபொருள் மீட்கப்பட்டுள்ளது.
New Brunswick மாகாணத்தின் Saint John துறைமுகத்தில், 6,700 கிலோகிராம் சந்தேகத்திற்குரிய கஞ்சா (Cannabis) பிடிபட்டுள்ளதாக கனடிய எல்லைப் பாதகாப்புப் பிரிவு Canada Border Services Agency (CBSA) தெரிவித்துள்ளது.
இது கடந்த ஒரு தசாப்தத்தில் மீட்கப்பட்ட மிகப் பெரிய கஞ்சா தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கஞ்சா தொகை, ஸ்காட்லாந்துக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்த ஒரு கடல் சரக்குக் கொண்டெய்னரை கனடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதில், மொத்தம் சுமார் 49.6 மில்லியன் டொலர் மதிப்பிலான கஞ்சா பதுக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா போதைப் பொருள் 400 பெட்டிகளில் மறைக்கப்பட்டிருந்தன, மேலும் இது 2024ஆம் ஆண்டில் கனடா முழுவதும் கனடிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்த கஞ்சா அளவை விட மூன்று மடங்கு அதிகமானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.