8.2 C
Scarborough

கனடாவின் அரச நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் உட்புறக் கட்டுப்பாட்டு குறித்து விசாரணை

Must read

கனடாவின் நிதித்துறையில் அதிகரித்து வரும் பணமோசடி முறைப்பாடுகளை தொடர்ந்து, சர்வதேச நிதிக் குற்றத்தடுப்பு அமைப்பான Financial Action Task Force அந்த நாட்டில் நேரடி கணக்காய்வுகளை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவில் டிடி வங்கிக்கு (TD Bank) விதிக்கப்பட்ட சாதனை அளவிலான 3 பில்லியன் டொலர் அபராதம் மற்றும் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கு ஆகியவற்றின் பின்னணியில் இந்த ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இலங்கை, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய இந்தக் குழு, கனடாவின் 13 அரச நிறுவனங்கள் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உட்புறக் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

கனடாவில் ஆண்டுதோறும் சுமார் 113 பில்லியன் டொலர் கறுப்புப் பணம் சட்டவிரோதமாக வெள்ளையாக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான கணக்காய்வு முடிவு 2026-ம் ஆண்டு வெளியாகும்.

இது எதிர்மறையாக அமையும் பட்சத்தில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசின் பொருளாதார நற்பெயருக்கும், சர்வதேச முதலீடுகளுக்கும் பெரும் சவாலாக அமையும் என பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article