கனடாவின் அடுத்த பிரதமராக யார் வருவதை கனேடியர்கள் விரும்புகின்றனர் என்பது தொடர்பில் கனேடிய தொலைக்காட்சியொன்று நடத்திய கணக்கெடுப்பில் அந்நாட்டில் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி முதலிடம் பிடித்துள்ளார்.
அதன்படி, 50 சதவீதமானோர் பேர் கார்னியையும், 33 சதவீதமானோர் பொய்லிவ்ரேவையும் NDP தலைவர் ஜக்மீத் சிங்குக்கு ஐந்து சதவீதத்தினரும் வாக்களித்துள்ளனர்.
அதன்படி லிபரல் தலைவர் மார்க் கார்னியின் வாக்குப் வங்கி இரட்டிப்பாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்களை விட பெண்கள் லிபரல்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதையும் இந்த கணக்கெடுப்பு காட்டுகிறது. கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் ஐம்பத்திரண்டு சதவீதம் பேர் தாங்கள் லிபரல்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியிருப்பதோடு, கன்சர்வேடிவ்களுக்கு 29 சதவீதமான பெண்கள் வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர்.
மறுமுனையில் 40 சதவீத ஆண்கள் லிபரல்களையும் 45 சதவீதமானோர் கன்சர்வேடிவ்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.