கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் ஆவார்.
குறித்த நபர் தனது தந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத சந்தேகநபர்கள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவ இடமான வீட்டு அறையில் இருந்து இரண்டு வெற்று துப்பாக்கி தோட்டா உறைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர் என தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த நபர் முதலில் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.