15.5 C
Scarborough

கடும் மன அழுத்தத்தில் தவிக்கும் கனேடிய தொழிலதிபர்கள்!

Must read

பெரும்பாலானோர் தங்களை “வாழ்க்கையில் சிறந்து விளங்குகின்றோம்” என்று கருதினாலும், உலகிலேயே மிக அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகும் தொழிலாளர்களில் கனடியர்கள் முன்னிலையில் இருப்பதாக புதிய காலெப் Gallup ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் 225,000 தொழிலாளர்களிடம் அவர்கள் பணித்துறையிலும் வாழ்க்கையிலும் பெறும் அனுபவங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டதாக 2024 ஆம் ஆண்டிற்கான ஸ்டேட் ஒப் க்லோபல் வேர்க்பிளேஸ் “State of the Global Workplace” அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் கனடியர்கள் வாழ்க்கையில் பெற்ற மதிப்பீடுகள் சராசரியைவிட அதிகமாக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் அதிகமான மன அழுத்தம் அனுபவிப்பதாக கூறியவர்களின் விகிதம் உலகில் மிக உயர்வாக இருந்தது.

உலகிலேயே அதிகமாக மன அழுத்தத்தில் உள்ளவர்களாக கனடிய தொழிலாளர்கள் – கெல்லப் ஆய்வு | Stress And Success Canadian Workers

• 33% பேர் தங்களை “வாழ்வில் சிறந்து விளங்கும்” (Thriving) என Gallup வகைப்படுத்தியது

• 58% பேர் “போராடிக் கொண்டிருப்போர்” (Struggling)

• 9% பேர் “துன்புறுவோர்” (Suffering) என மதிப்பீடு செய்யப்பட்டனர்

Thriving என வகைப்படுத்தப் பட்டவர்கள், தங்கள் தற்போதைய நிலைமையை 7/10 அல்லது அதற்கு மேல், எதிர்கால நம்பிக்கையை 8/10 அல்லது அதற்கு மேல் என மதிப்பீடு செய்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

58% கனடியர்கள் “நாளில் பெரும்பகுதி நேரம் மன அழுத்தம் உணர்கிறோம்” என பதிலளித்துள்ளனர்.

இது உலக சராசரி அளவை விட 18 சதவீத புள்ளிகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மொத்தத்தில், அனைத்து பதிலளிப்பாளர்களில் 50% பேர் வேறு வேலை வாய்ப்புக்காகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article