15.9 C
Scarborough

“கடவுளை ஏமாற்ற முடியாது” – ஆர்த்தி!

Must read

ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “கடவுளை ஏமாற்ற முடியாது. மற்றவர்களை ஏமாற்றலாம். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது” என்று ஆர்த்தி ரவி பதிவிட்டிருந்தார். ரவிமோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நேரத்தில் அவர் வைத்திருந்த இந்த ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலானது.

நடிகர் ரவி மோகன், ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, ஜெனிலியா என பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், தன்னுடைய தோழி கெனிஷா தனக்கு கடவுள் கொடுத்த பரிசு” என்றும் ரவி மோகன் நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.

முன்னதாக, நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சமீபத்தில், பரஸ்பர ஒப்புதலுடன் தனது மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தார். பின்னர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article