3 C
Scarborough

கடன் பிரச்சினை தீரும் நாள்- இன்றைய ராசிபலன் – 26.12.2025!

Must read

மேஷம்

தங்களின் பிள்ளைகளின் சுபகாரியம் சம்பந்தமாக வெளியூருக்குச் சென்று ஆடை, அணிமணிகள் வாங்கிவருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பர். நினைத்த காரியங்கள் பலதில் ஒன்று முடியும். மனம் ஆன்மீகத்தில் நாடும். உடற்பயிற்சி அவசியம் என உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

ரியல் எஸ்டேர் மற்றும் கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல தொகை கிடைக்கும். ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். தீர்க்கயாத்திரை மேற்கொண்டு மகான்கள், ஆன்மீகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மிதுனம்

குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். மளிகைக் கடை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபர்களுக்கு விரும்பிய உத்யோகம் கிடைக்கும். நாத்தனார்ர் தொல்லை அகலும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

அரசியல்வாதிகள் பேச்சில் நிதானம் தேவை. பொறுமை அவசியம். மார்கெட்டிங்பிரிவினர்களுக்கு இலக்குகளை எட்டிவிடுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கதவை தட்டும். கமிஷன் மற்றும் இரும்பு தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

சிம்மம்

சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி

அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். பல வருடங்களாக பிள்ளைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். எதிர்பார்த்த ஒரு தொகை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

பணவரவு அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். புதியவர்களின் நட்பு பலக்கும். வாகனம் ஓட்டும் போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

விருச்சிகம்

பணம் பலவழிகளில் வரும். வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். உடல் உற்சாகத்துடன் காணப்படும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். பங்குச் சந்தை பலன் தரும். தம்பதிகளின் ஒற்றுமைக்கு குறையிருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

தனுசு

விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும். ஆன்லைன் மற்றும் பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து நிதானமுடன் செயல்படவும். குடும்பத் தலைவிகள் தங்களுடைய அனாவசியமான ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டு அத்தியாவசியத்திற்கு மட்டும் செலவு செய்யப்பாருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். பயணங்களின் போது கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்களால் உங்களது தொழிலுக்கு உதவிபுரிவர். வீட்டைப் பற்றியும் கவனத்தில் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கும்பம்

பணவரவில் தாமதம் இல்லை. வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை நீங்கும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மீனம்

பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு பலிக்கும். பிரபலமானவர்களால் உதவி உண்டு. தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். தம்பதிகளிடையே அன்பு பலமாகும். பெண்களுக்கு கை, கால் வலி குறைந்து, ஆரோக்கியம் சிறக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article