19.8 C
Scarborough

ஓடிடியில் ஜூலை 19-ல் ‘டி.என்.ஏ’ ரிலீஸ்

Must read

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ’டி.என்.ஏ’ திரைப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகிறது.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான படம் ‘டி.என்.ஏ’. ஜூன் 20-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படம் வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்டுவிட்டது.

தற்போது ஜூலை 19-ம் தேதி ‘டி.என்.ஏ’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நிமிஷா சஜயன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், சேத்தன் உள்ளிட்ட பலர் அதர்வாவுடன் நடித்திருந்தார்கள். இதற்கு 5 புதிய இசையமைப்பாளர்கள் ஓவ்வொரு பாடலை உருவாக்கி இருந்தார்கள்.

‘டி.என்.ஏ’ படத்தின் பின்னணி இசையினை ஜிப்ரான் அமைத்திருந்தார். திரையரங்குகளுக்கு வந்து படம் பார்த்த பலரும் இப்படத்தினைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. ஜூலை 19-ம் தேதி ஓடிடி வெளியீட்டுப் பிறகு இணையத்தில் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article